ஜனவரி 22, அயோத்தி (Ayodhya): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக பணிகள் இன்று நடைபெற்று, கோவில் மக்களின் தரிசனத்திற்காக நேரடியாக திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கோவிலை திறந்து வைக்கிறார். கும்பாபிஷேகம் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் மக்கள் வெள்ளம்: கும்பாபிஷேகத்தை நேரில் பார்க்க பக்தர்களும் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் நேரில் சென்று இருக்கின்றனர். இந்திய முழுவதும் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் பல நிகழ்ச்சிகளும், அன்னதானம் போன்றவையும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Mira Road Stone Pleading: ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் பேரணி; கல்வீசி நடந்த தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
அக்சய் குமாரின் வாழ்த்து: இந்நிலையில், நடிகர் அக்சய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். அந்த எக்ஸ் பதிவில், "ஸ்ரீராமரின் தினமான இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ஜெய் ஸ்ரீ ராம்" என தெரிவித்துள்ளார்.
श्री राम की प्राण प्रतिष्ठा के पावन दिन पर आप सब को अनेक शुभकामनाएँ। 🙏 जय श्री राम pic.twitter.com/B0RKViuvEn
— Akshay Kumar (@akshaykumar) January 22, 2024