ஏப்ரல் 19, நீலாங்கரை (Chennai): இந்தியாவில் உள்ள 94 கோடி வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ள மக்களவைக்கான இந்தியா தேர்தல்கள் 2024, ஏப்ரல் 19ம் தேதியான இன்று தனது முதல்கட்ட வாக்குப்பதிவை தொடங்கி இருக்கிறது. அடுத்தடுத்து ஆறு கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றுகிறது. முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காலை முதலாக பலரும் தங்களின் ஜனநாயக கடைமையை விறுவிறுப்புடன் செலுத்தி வருகின்றனர்.
ஜனநாயக கடமையை செலுத்தும் இந்தியக்குடிமக்கள்: நடிகர் அஜித் குமார், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் ஆகியோர் காலையிலேயே தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் தங்களது வாக்குப்பதிவு மையங்களில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர். நடிகர் விஜய் கோட் (GOAT 2024 Movie) படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார். Annamalai Allegation on DMK AIADMK Parties: "கோவையில் அண்ணாமலையை வீழ்த்த ரூ.1000 கோடி செலவு செய்த திமுக, அதிமுக" - பகிரங்க குற்றசாட்டு.!
நடிகர் விஜய் வாக்களித்தார்: 2026 மக்களவை தேர்தலில் களமிறங்கும் திட்டத்துடன் செயலாற்றி வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தையும் உருவாக்கி நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவர் சைக்கிளில் வந்து வாக்களித்து சென்றிருந்தார். இது மக்களின் கவனத்தை திருப்பியது. இந்நிலையில், தற்போது அவர் தேர்தலில் வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பினார். சென்னை நீலாங்கரையில் இருக்கும் தனது வாக்குச்சாவடிக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் (Actor Vijay), மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்குப்பதிவை உறுதி செய்தார்.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam president Vijay casts his vote at a polling booth in Neelankarai, Chennai#LokSabhaElections2024 pic.twitter.com/rTtu4tGZJy
— ANI (@ANI) April 19, 2024