Charlie Chaplin File Pic (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 16, லண்டன் (Cinema News): சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயரை கொண்ட சார்லி சாப்ளின் (Charlie Chaplin) ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில், சீனியர் சார்லஸ் சாப்ளின் - ஹன்னாஹ் ஹில் தம்பதிக்கு ஏப்ரல் 16ம் தேதி 1889 அன்று மகனாக பிறந்தார். தனது இளமை காலத்தில் இசை பயணத்தில் ஈடுபட்டு இருந்த தந்தை, நடிகையாக இருந்த தாய் ஆகியோரின் உதவியுடன் திரையுலகம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்ட சார்லி சாப்ளின், சிறுவயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பின்னாட்களில் அவர் பேசும் படங்களில் நடிக்காமல் தனது செய்கை காரணமாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். இதனால் அவர் உலகெங்கும் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் அறியப்பட்டார். Cannabis Atrocity: கஞ்சா போதையில் அதிகாரிகளை உறவுக்கு அழைத்த பெண்; நிர்வாணமாக பரபரப்பு செயல்.! 

இறுதி வாழ்க்கை வரை திரைஉலகுக்காக உழைத்தவர்: 1899ம் ஆண்டு முதல் என தான் உயிரிழக்கும் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை திரைத்துறையில் பணியாற்றி வந்த சார்லி சாப்ளின், தனது 10 வயது முதல் நடித்து வந்துள்ளார். திரையில் இவர் தி கிட், வுமன் ஆப் பேரிஸ், தி கோல்ட் ரஷ், தி சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், மார்டன் டைம்ஸ், தீப் கேட்சர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் படங்கள் உலகளாவிய வரவேற்பையும் பெற்றது. திரைத்துறைக்காக தனது இறுதி வாழ்க்கை வரை இவர் உழைத்து, 75 ஆண்டுகளும் மேல் ஓயாத உழைப்பாளியாக பணியாற்றி இருந்தார். தனது 20 வயதில் முதல் திருமணம் செய்த சார்லி சாப்ளின், மொத்தமாக 4 திருமணங்கள் செய்தார். இதன் வாயிலாக அவருக்கு 11 குழந்தைகளும் இருந்தனர். உலகளவில் பலரையும் சிரிக்க வைத்த சார்லி, தனது வாழ்நாட்களில் கடும் உழைப்பு மற்றும் பிற சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இவர் தனது 88 வயதில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் 1977ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று மறைந்தார். சார்லி சாப்ளினின் பல விடியோக்கள் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் பிறந்தநாளை இன்று, அவர் நடித்த ஒருசில விடியோவை பதிவிட்டு ரசிகர்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.