![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/05/John-Kokken-Pooja-Ramachandran-Couple-Photo-Credit-Instagram-380x214.jpg)
மே 10, மும்பை (Cinema News): தென்னிந்திய திரையுலகில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கன் (John Kokken). இவர் கடந்த 2006ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கலாபம் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிகளிலும் வெளியான படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழில் ஒஸ்தி, வீரம் (Veeram), சார்பட்டா பரம்பரை, பொய்க்கால் குதிரை, துணிவு (Thunivu) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகை மீரா வாசுதேவனை (Meera Vasudevan) திருமணம் செய்த ஜான் கொக்கன், 2016ம் ஆண்டு அவரை பிரிந்தார். தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். 3 Children Died: துணி துவைக்க சென்று பரிதாபம்.. மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலியான சோகம்.! பெற்றோர்கள் கண்ணீர்.!
3 ஆண்டுகள் கடந்து கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகையான பூஜா ராமச்சந்திரனை (Pooja Ramachandran) திருமணம் செய்தார். தற்போது வரை தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இருவரும் தங்களின் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு அதனை உறுதியும் செய்தனர்.
துணை நடிகையாக வலம்வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழில் 7ம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி?, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை பூஜா ராமச்சந்திரன் - ஜான் கொக்கன் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
View this post on Instagram