மே 09, வனபர்த்தி: ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலா பகுதியைச் சார்ந்தவர் கந்தம் குருமன்னா. இவரின் மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (வயது 9), தீபிகா (வயது 7). சகோதரிகள் மூவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். விடுமுறை காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கின்றனர்.
நேற்று காலை நேரத்தில் சிறுமிகள் அங்குள்ள வீரா சமுத்திரம் பகுதியில் இருக்கும் குளத்தில் துணிகளை துவைப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் திருப்புத்தம்மா எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்துள்ளார். இதனை கண்ட சகோதரிகள் சந்தியா மற்றும் தீபிகா அக்காவை காப்பாற்ற முயற்சித்து மூவருமாக நீரில் விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படக்குழுவினருக்கு அழைப்புகளில் வரும் மிரட்டல்; பயத்தின் உச்சக்கட்டத்தில் படக்குழு.!
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியனர். அப்பகுதி வாலிபர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மூவரின் சடலமும் மீட்கப்பட்டது. சிறுமிகளின் உடல்களை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறியழுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.