Thug Life (Photo Credit: @SilambarasanTR_ X)

மார்ச் 23, சென்னை (Cinema News): ராஜ்கமல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷ்னல் (Raaj Kamal Films International), மெட்ராஸ் டால்கிஸ் (Madras Talkies), ரெட் ஜெயிண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் (Maniratnam) இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப் (Thug Life). சென்னை, புதுச்சேரி, டெல்லி என பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடித்து, படம் வெளியீடுக்கு தயாராகி இருக்கிறது. புகழ்பெற்ற தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பொன்னியின் செல்வன் என்ற படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வழங்கி இருந்தார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எடுக்க முயற்சி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம், மணிரத்னத்தின் முயற்சியால் சாத்தியமானது. Idly Kadai Movie Release: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வெளியீடு தள்ளிப்போகிறது? - படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.! 

தக் லைஃப் வெளியீடு தேதி (Thug Life Movie Tamil):

அதனைத்தொடர்ந்து 234 வது கமல் ஹாசனின் திரைப்படத்தை, மணிரத்னம் இயக்கி வழங்கி இருக்கிறார். தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜியார்ஜ், அபிராமி, நாசர், மகேஷ் மஞ்ச்ரேகர், தணிகெல்லா பரணி, சின்னி ஜெயந்த், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். ரவி சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், டி-பாக்ஸ் எனப்படும் தொழில்நுட்ப முறையில் உருவாகியுள்ள படம் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் வெளியாகிறது. மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில், நாயகன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பின்னர், இருவரும் தக் லைஃப் படத்தில் இணைந்து இருக்கின்றனர். இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் (Thug Life Release Date) 05 ஜூன் 2025 அன்று திரையரங்கில் வெளியாகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படுகிறது.

தக் லைஃப் படத்தின் வெளியீடு தொடர்பாக சிலம்பரசன் வலைப்பதிவு:

தக் லைஃப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படுகிறது: