Thug Life Trailer (Photo Credit: @RKFI X)

மே 17, கோடம்பாக்கம் (Cinema News Tamil): மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன்,சானியா மல்கோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜுஜு ஜியார்ஜ், நாசர், அலி பாசில், பங்கஜ் திரிபாதி, வையாபுரி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தக் ஃலைப் (Thug Life). ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல், மெட்ராஸ் டால்கிஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. வானிலை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து படம்:

ரூ.200 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பு பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ளார். கடந்த 1987ம் ஆண்டு நாயகன் திரைப்படத்துக்கு பின்னர் கமல் ஹாசன் - மணிரத்னம் இப்படத்தில் இணைந்துள்ளனர். நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இக்கதை இருக்கலாம் என்றும் அல்லது அதேபோல பயங்கர வில்லத்தனமான கேங்ஸ்டரின் கதையாக இருக்கலாம் எனவும் எதிர்க்கபார்க்கப்படுகிறது.

05 ஜூன் 2025 அன்று வெளியீடு:

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, புதுடெல்லி, பிற வடஇந்திய மாநிலங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்து 5 ஜூன் 2025 அன்று வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ப்ரமோஷன் பணிகள் படக்குழு தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று படக்குழு தரப்பில் ட்ரைலர் காட்சிகள் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

படத்தின் ட்ரைலர் காட்சிகள் இதோ (Thug Life Official Trailer Tamil):