நவம்பர் 07, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் நடித்த நடிகர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Hassan).
இவரை கமலின் ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று அழைப்பது வழக்கம். தற்போது 69 வயதில் அடியெடுத்து வைத்துள்ள கமல்ஹாசன், கடந்த 1954 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராகவும், தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்ட புத்தக விரும்பியாகவும், கலைஞராகவும் இருக்கிறார்.
தற்போது வரை 233 படங்களில் அவர் நடித்து விட்ட நிலையில், 234வது திரைப்படம் உருவாகி வருகிறது. இவரின் கனவுத்திரைப்படமான மருதநாயகம் விரைவில் நிஜமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவரின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்று திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது. Firecrackers Ban in India: ஒட்டுமொத்த இந்தியாவிலும் பட்டாசுகள் விற்பனை, வெடிப்பதற்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி.!
இதற்கு முன்னதாக காலையில் எழும்பூர் மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர், அங்கு மக்களுடன் அமர்ந்து உணவும் சாப்பிட்டார். இந்நிலையில், இவரின் பிறந்த நாள் விழாவில் நடிகர் சூர்யா, ஹிந்தி நடிகர் அமீர்கான் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ்த்திரை உலகில் இவர் வெற்றி கண்ட உலகநாயகன் அந்தஸ்தை வழங்கியது. பல வீழ்ச்சிகளை கண்டு முன்னெழுந்தவர் இவர் ஆவார். இவரின் திரை உலக பயணத்தை பாராட்டும் விதமாக நான்கு தேசிய விருதுகள், 9 தமிழ்நாடு அரசு விருதுகள், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.