Thug Life / Delhi Supreme Court (Photo Credit: @MovieCrow X / wikipedia)

ஜூன் 09, சென்னை (Cinema News): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கூறியிருந்தார். Actress Samantha: YMC டாட்டூவை நீக்கிய சமந்தா?.. கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு டுவிஸ்ட்.! 

கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திற்கு எதிர்ப்பு :

இந்த விஷயத்திற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாக கூடாது என கர்நாடக மாநில அமைப்புகள் மற்றும் அம்மாநில அரசு சார்பிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன் கர்நாடக மாநில நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் கமல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருந்தது.

பட வெளியீட்டை தள்ளி வைத்த கமல் :

இதனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த கமல்ஹாசன், மன்னிப்பு கேட்காமல் தனது சொல்லுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மட்டும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் அம்மனு விசாரணையை தள்ளி வைத்தனர். இதனை அடுத்து தற்போது கர்நாடக மாநில திரைப்பட சங்கம் சார்பில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் :

மேலும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் சேதப்படுத்தப்படும் என மிரட்டல்கள் வருகின்றன என்றும், உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் கமலின் தக் லைஃப் திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.