ஆகஸ்ட் 16, உத்தரகாண்ட் (Cinema News): இந்தியத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அவரின் ரசிகர்களால் தலைவா, சூப்பர்ஸ்டார், தளபதி என்று பல்வேறு புனைபெயர்களால் அழைக்கப்பட்டார். தற்போது சூப்பர்ஸ்டார் தொடர்பான பட்டத்திற்கு நடக்கும் சில பிரச்சனைகளை மறைமுகமாக மேற்கோளிட்டு பேசும் ரஜினிகாந்த், இந்த குதிரை விழுந்தாலும் எழுந்து ஓடும் என 70 வயதை கடந்தும் நிரூபித்து வருகிறார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் குடும்பங்கள் & ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர்ஹிட் வெற்றி அடைந்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் ஸலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்பின் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். Virat Kohli Fitness: “விடுமுறை என்றாலும் கட்டாயம் ஓட வேண்டும்” – இளம் தலைமுறைக்கு விராட் கோலியின் அசத்தல் அறிவுரை.!
படத்தின் வெளியீடுக்கு முன்னதாகவே நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். கடந்த 4 ஆண்டுகளாக நிலவிய கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக அவர் இமயமலை பயணம் செய்ய இயலாமல் தவித்து வந்தார். தற்போது நிலைமை அனைத்தும் சாதகமாக இருப்பதால் அவர் தனது இமயமலை பயணத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து ரஜினிக்கு முன்பாக 55 நாட்கள் நடந்து மகாவதாரம் பாபாஜியின் பக்தர் நடைபயணம் மேற்கொண்ட பக்தர், தற்போது மகாவதாரம் பாபாஜி குகையில் இருந்தபோது ரஜினியுடன் சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் இளைஞருக்கு தேவையான உதவிகளையும் செய்தார். அவருடன் அங்கிருந்த காவலர்கள் உட்பட பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த இளைஞர் சென்னையில் இருந்து மகாவதார் பாபாஜி குகைக்கு 55 நாட்கள் நடந்து சென்று நம் அன்புத் தலைவர் @rajinikanth அவர்களை சந்தித்தார்.
தலைவர் அவருக்கு பண உதவி செய்தார். மேலும் குளிர்ந்த காலநிலையில் ஒரு மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரை இப்போது ஒரு சன்யாசியுடன் ஒரு சிறிய… pic.twitter.com/J5dR6gfm24
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) August 15, 2023
இன்று மகாவதார் பாபாஜி குகையில் நம் அன்புத் தலைவர் @rajinikanth அவர்கள் தியானத்தில் இருந்தார்! pic.twitter.com/n9Mi4U8a3G
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) August 15, 2023