Rajinikanth Tiruvandrum Airport (Photo Credit: Twitter)

அக்டோபர் 03, திருவனந்தபுரம் (Cinema News): நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுனில், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இந்த படம் வசூல் & விமர்சன ரீதியாக அமோக வெற்றியை அடைந்தது. இதனால் படத்தயாரிப்பு குழு படக்குழுவினருக்கு கார் உட்பட பல்வேறு பரிசுகளை வழங்கியது.

அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் ஸலாம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். லைகா தயாரித்துள்ளது. விஷ்ணு விஷால், விதார்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் உருவாகிறது. படத்தின் பெயர் தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. Thiruvallur Crime News: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் வெட்டிக்கொலை: 5 பேர் பரபரப்பு கைது.!

இப்படத்திற்கான பூஜைகள் நிறைவுபெற்று, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்ள புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ஜெயிலர் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை அடைந்துள்ளது. அடுத்த திரைப்படம் நல்ல கருத்துக்கள் கொண்ட, பொழுதுபோக்கு திரைப்படம். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து, திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்துக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் வீடியோ வெளியாகி இருக்கிறது.