Crime File Pic (Photo Credit: Pixabay)

அக்டோபர் 03, பொன்னேரி (Thiruvallur Crime News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, மீஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் வைதேகி. இவரின் கணவர் சுமன். சுமன் விவசாயம், ரியல் எஸ்டேட், வியாபாரம் என பல தொழில்களை செய்து வந்துள்ளார். அங்குள்ள பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.

நேற்று இரவு நேரத்தில் 07:00 மணியளவில் கோவில் திருவிழா தொடர்பாக துண்டு பிரசுரம் வழங்க, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை இடைமறித்த 2 பேர் கும்பல், சரமாரியாக வெட்டிச்சாய்த்து தப்பி சென்றது.

இந்த கொலை சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.! 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து சுமனின் உறவினர்கள் கூறுகையில், "சுமன் எப்போதும் அவர் வேலையை கவனித்துக்கொண்டு அமைதியாக இருப்பார்.

எந்த வம்புக்கும் செல்லமாட்டார். ஊராட்சிமன்ற தலைவர் எஸ். சங்கர் எப்போதும் சுமனுக்கு தொல்லை கொடுத்து வருவார். நாகராஜ், சிவமணி, மனோகரனின் மகன் சரண், விவேக், அன்பு ஆகியோர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இவர்கள் திட்டமிட்டு சுமனை கொலை செய்துள்ளனர்.

அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால், காவல் துறையினர் தற்போது வரை யாரையும் கைது செய்யவில்லை. நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். தலைமறைவானவர்களை தேடி வருவதாக கூறுகிறார்கள்" என தெரிவித்தனர்.

இதனிடையே தனிப்படை காவல் துறையினர், இக்குற்றவழக்கில் தொடர்புடைய சரண், கரண், ராமு உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.