
பிப்ரவரி 27, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சல்மான் கான், 18 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். ரூ.400 கோடி செலவில் உருவாகி இருக்கும் சிக்கந்தர் (Sikandar 2025 Film) திரைப்படத்தை சஜித் நாடியவாளா தயாரித்து வழங்கி இருக்கிறார். திரு ஒளிப்பதிவாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும் பணியறியுள்ளனர். இசையமைப்பு பணிகளில் ப்ரீதம் பின்னணி பாடல், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசைக்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். Kingston Official Trailer: மிரட்டல் காட்சிகள்.. கடலுக்குள் நீடிக்கும் மர்மத்துடன் மாஸ் சம்பவம்.. ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படம் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
சிக்கந்தர் படக்குழு:
படத்தில் நடிகர் சல்மான் கான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஷி கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், 2025 மார்ச் மாதம், ஈத் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது. மாநில அளவில் பிற மொழியிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 5000 திரையரங்கில் சிக்கந்தர் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.