ஏப்ரல் 20, சென்னை (Cinema News): சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில், நகைச்சுவையில் தனது வாழ்வினை தொடங்கி, இன்று நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடப்பெற்றுள்ளவர் சந்தானம் (Santhanam). விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபாவில் தொடங்கிய சந்தானத்தின் திரைப்பயணம், கடின உழைப்பு மற்றும் சிம்புவின் உதவியால் வெள்ளித்திரையில் சாத்தியமானது.

காமெடி ஆக்டர் டு கதாநாயகன்: பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, படத்தின் வெற்றிக்கு முக்கிய அங்கமாக இருந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, டிக்கிலோனா, சபாபதி, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. US imposed Sanctions against 3 Chinese Companies: பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க உதவிய சீன நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா உத்தரவு.! 

10ம் தேதி படம் வெளியீடு: கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு (Inga Naan Thaan Kingu Relase Date)' என பெயரிடப்பட்டது. ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ள படம், வரும் மே மாதம் 10ம் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளது.