Pakistan Flag | US Flag (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 20, வாஷிங்க்டன் டிசி (World News): உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை ஒழிக்க, சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தாக்குதல்களை முன்னெடுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. Viral Video: மதுபோதையில் காவலரின் மீது கல்வீசி தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.! 

முன்னாள் அமெரிக்க அதிபரின் அதிரடி செயல்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா நிதிஉதவி அளித்து வந்த நிலையில், அந்த தொகையை பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கிறேன் என்று பெயரளவில் கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்தினார். சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பாகிஸ்தானின் மீது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. Spa Turned Prostitution Center: 8 ஆண்களுடன் 17 பெண்கள்.. ஸ்பாவில் நடந்த பலான தொழில்., கதவைத்திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.! 

3 சீன நிறுவனங்கள் உட்பட 4 நிறுவனத்திற்கு தடை விதித்த அமெரிக்கா: இந்நிலையில், பாகிஸ்தான் அரசு தயாரித்து வரும் பாலிஸ்டிக் ரக கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள் சிலவற்றை வழங்கியதாக 3 சீன நிறுவனங்கள் மற்றும் 1 பெலாரஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இது அவர்களின் சர்வதேச அளவிலான சந்தையை நேரடியாக பாதித்து இருக்கிறது.