Actor Vijay Leo Success Meet (Photo Credit: @ActorVijayTeam X)

நவம்பர் 02, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜ் - இளையதளபதி விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கிய லியோ திரைப்படத்திற்கு, அனிரூத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்திருந்தனர். படம் கடந்த அக்.19 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகி வசூல், வரவேற்பை குவித்தது.

படத்தின் இசை வெளியீடு விழா பல்வேறு காரணங்களால் தடைபட்ட நிலையில், படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. படக்குழுவினர் பலரும் தங்களின் கருத்துக்களை மேடையில் தெரிவித்தனர்.

இறுதியாக நடிகர் விஜய் மேடைக்கு வந்து முதலில் தனது ரஞ்சிதமே பாணியில் முத்தங்களை கொடுத்து, மைக்கை பிடித்து நான் ரெடி என்ற வாசகத்தை முன்வைத்தும் அரங்கமே அதிர்ந்தது. Rajinikanth Temple at Madurai: ரஜினியை சாமியாக நினைத்து வணங்கும் ரசிகர்; தலைமுறைகளை கடந்து ரசிகப்பெருமக்களை பெற்ற சூப்பர்ஸ்டார்.! 

Leo Sucess Meet (Photo Credit: X)

தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் இவ்வுளவு நாட்களாக உங்களை என் நெஞ்சுக்குள் வைத்திருந்ததாக நினைத்தேன். இப்போது நான் புரிந்துகொண்டேன், உங்களின் நெஞ்சுக்குகள் எனக்கு மிகப்பெரிய இடம் வழங்கிஉள்ளேர்கள். எனது தோலை செருப்பாக தைத்தால் கூட, உங்களின் அன்புக்கு அது ஈடாகாது. நான் உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.

ஒருநாள் 2 பேர் காட்டுக்கு வேட்டைக்கு போனார்களாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகு நிறையா இருந்துச்சாம் என குட்டி கதையையும் நடிக்கர் விஜய் விவரித்தார்.

நம்மால் எதை எளிதில் வெல்லமுடியுமோ அது வெற்றி இல்லை. எது முடியாதோ அதை பண்ணவேண்டும். அதுதான் வெற்றி. முயற்சியாவது செய்யலாம். பெரிதினும் பெரிது கேள். ஆசைப்படணும் அதுல என்ன தப்பு?.

ஒரு சின்ன பையன் அவுங்க அப்பா டிரஸ், வாட்ச் போடுவான். பெருசா தொளதொள என இருக்கும். என்ன தப்பு?. ஆசைப்படலாம். சினிமாவை சினிமாவாக பாருங்கள். Malaiyalam TV Actress Died by Heart Attack: பிரபல மலையாள நடிகை, மருத்துவருமான பிரியா மாரடைப்பால் காலமானார்.. 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த சோகம்.! 

பள்ளி-கல்லூரிகள் செல்லும் வழியில் அதிகமாக மதுபான கடைகள் இருக்கிறது. அதனால்? அனைவர்க்கும் நல்லது எது என்பது தெரியும். எனது ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் என்றாலும், அவர்களுக்கு படம் பிடித்தால் விரும்புவார்கள். படம் பிடிக்கவில்லை என்றால் போடா என்பார்கள். அனைவருக்கும் யோசிக்கும் திறன் தெளிவாக உள்ளது.

ஏவிஎம் சரவணன் வயதான பெண்மணிக்கு ரூ.100 கொடுத்தார். பணத்தை பெற்ற பெண்மணி நன்றாக இருப்பாய் எம்.ஜி.ஆர் என்றார். அந்த நேரத்தில் பெண்ணுக்கு அவர் எம்.ஜி.ஆராக தெரிந்தார். எதிர்காலத்தில் யார் நல்லவர்களா, அவர்கள் நமது மக்கள் தான்.

ஒரு வேட்டையன் முயலுக்கு குறிவைத்தான், ஒருவர் யானைக்கு குறிவைத்தார். முயலுக்கு குறிவைத்தவருக்கு முயல் கிடைத்தது, அவர் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார். யானைக்கு குறிவைத்தவர் தங்களது கத்தி, ஈட்டியுடன் வீட்டிற்கு திரும்பினார்.

என்னைப்பொறுத்தமட்டில் வெறும் கைகளுடன் வந்தவர் திறமைசாலி. ஏனெனில் அவரின் இலக்கு பெரிதாக இருந்தது. மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்தது.

Actor Vijay (Photo Credit: X)

லியோ திரைப்படத்திற்கு பின்னர் ஹாலிவுதானா லோகேஷ்?. நீங்கள் கலக்குங்கள். நான் உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சி தலைவர் என்றால் அவர் ஒருவர்தான், நடிகர் திலகம் என்றால் அவர் ஒருவர்தான், சூப்பர்ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான், உலகநாயகன் என்றால் அவர் ஒருவர்தான், புரட்சிக்கலைஞர் என்றால் அவர் ஒருவர்தான், தல என்றால் அவர் ஒருவர்தான், மக்கள் தான் மன்னர்கள், நான் உங்களின் தளபதி. நீங்கள் வழிநடத்தும் தளபதி, நீங்கள் என்னை வழிநடத்துங்கள்.

அட்லீ, லோகேஷ், நெல்சன் தங்களின் தனித்துவமான பாணியில் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என பேசி முடித்தார். அதனைத்தொடர்ந்து, தொகுப்பாளர் லோகேஷ் 10 திரைப்படங்களை இயக்கி முடித்ததும், உங்களுடன் அரசியலுக்கு வந்தால் என்ன துறை கொடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடி பதிலளித்த விஜய், போதைக்கட்டுப்பாட்டு துறையை வழங்குவேன் என கூறினார். அதனைத்தொடர்ந்து, ஒரு வரியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இளையதளபதி விஜய் அளித்த பதில்கள் பின்வருமாறு.,

கல்வி - எல்லோருக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டிய விஷயம்.

புகழ் - அர்ஜுன் சார் முதல்வன் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்.

மக்கள் - பிடித்தால் தட்டி கொடுப்பார்கள், பிடிக்கவில்லைவில்லை என்றால் தட்டி விட்டுவிடுவார்கள்

எம்ஜிஆர் - இது வரைக்கும் தோல்வியே கண்டிடாத தலைவன்.

2026 - 2025 க்கு பின் வரும் ஆண்டு. உலகக்கோப்பை கால்பந்தாட்டம் உள்ளது. கோப்பை முக்கியம் பிகிலு" என்று பேசினார்.