Madharasi Glimpse Video (Photo Credit: YouTube)

பிப்ரவரி 17, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் சிவகார்த்திகேயன், முன்னணி தமிழ்த் திரையுலக இயக்குனரில் ஒருவரான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் மதராஸி (Madharasi) படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் (Sri Lakshmi Movies) நிறுவனம் தயாரித்து வழங்கும் படத்தை, ஏ.ஆர் முருகதாஸ் (AR Murugadoss) இயக்க, அனிரூத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்து வழங்குகிறார். இப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்மாவால், பிஜு மேதான், சபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர். Viral Girl 'Monalisa': நகைக் கடை திறப்பு விழாவில் இந்தியாவின் "மோனாலிசா".. வைரலாகும் வீடியோ..!

மதராஸி கிலிம்ப்ஸ் வீடியோ வைரல்:

சுதீப் இலமோன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் தயாராகி வரும் இப்படம், தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் வெளியாகிறது. ஆக்சன்-அதிரடி என சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மதராஸி இருப்பதை, இன்று வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ உறுதி செய்துள்ளது. அட்டகாசமான காட்சிகளை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

மதராஸி படத்தின் டைட்டில் கிலிம்ப்ஸ் வீடியோ (Madharasi Title Glimpse):