Sonu Sood (Photo Credit: Instagram)

ஜூலை 25, மும்பை (Cinema News): ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சோனு சூட் (Sonu Sood). இவருக்கு தற்போது 49 வயது ஆகிறது. தனது வில்லன் கதாபாத்திரத்தின் சிறந்த நடிப்புக்காக சைமா உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகி, பின் பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட அருந்ததி திரைப்படத்தில் இவரின் வில்லன் கதாபாத்திரம் பலராலும் வரவேற்கப்பட்டது. பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள சோனு சூட்-க்கு அறிமுகத்தை தந்தது தமிழ் படமான கள்ளழகர் மற்றும் நெஞ்சினிலே திரைப்படங்கள் தான். Russia Bans LGBTQ: பாலின மாற்று அறுவை சிகிச்சை, குழந்தை தத்தெடுப்புக்கு தடை – ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி.!

கடந்த 1999ல் இப்படங்கள் வெளியாகின. 2000ல் தெலுங்கு மொழியிலும் அவர் நடிக்க தொடங்கினர். தமிழில் இவர் சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம், தேவி, தமிழரசன் ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் கடந்த கொரோனா காலத்தில் தனது சொந்த செலவில் மக்களுக்கு உணவு வழங்கி இலட்சக்கணக்கான குடும்பங்களின் வலியில் கைகோர்த்து ஆறுதலாக இருந்தார்.

அதனைப்போல, தமிழ்நாடு உட்பட பல இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப இயலாமல் அவதிப்பட்ட நிலையில், அவர்களுக்காக சொந்த செலவில் விமானங்களை ஏற்பாடு செய்து தாயகம் அழைத்து வர உதவியாக இருந்தார். 50 வயதாகும் சோனு சூட் இன்றளவும் கச்சிதமான உடலுடன் இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)