BigBreaking: கொகைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகில் பரபரப்பு.!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார்.

BigBreaking: கொகைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகில் பரபரப்பு.!
Actor Srikanth Arrested (Photo Credit :@2024Gokul X)

ஜூன் 23, சென்னை (Cinema News): சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பார் ஒன்றில் தகராறு நடப்பதாக நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு சம்பவத்தன்று தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நேரில் சென்று அதிகாரிகள் தகராறு செய்த நபர்களை கைது செய்தனர். அப்போது இவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பிரபல தமிழ் நடிகரான ஸ்ரீகாந்தும் (Actor Srikanth) இந்த விவகாரத்தில் சிக்கியது தெரியவந்தது.

அரசியல் கட்சி பிரமுகருக்கும் தொடர்பு?

இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து ஸ்ரீகாந்த் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில், அரசியல் கட்சி பிரமுகர் பிரசாத் போதைப் பொருளை சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. Breaking: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது? 

ஸ்ரீகாந்த் கைது:

மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து தற்போது ஸ்ரீகாந்த் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பார்ட்டியில் நடிகர் கிருஷ்ணாவும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ரூ.5 இலட்சத்திற்கும் மேலாக பணம் உபயோகித்து கொகைன் வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனால் பல திரையுலக புள்ளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 23, 2025 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).