Actor Rakesh Poojary Dies (Photo Credit : BangaloreTimes1 X)

மே 12, கர்நாடகா (Karnataka News): கன்னட நடிகர் ரிஷப் செட்டியின் எழுத்து மற்றும் இயக்கம், நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த இளம் நடிகர் ராகேஷ் பூஜாரி (வயது 33). கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் உடுப்பி மாவட்டத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு :

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் கொண்டாட்டங்களில் ஒன்றான மெஹந்தி நிகழ்ச்சியின் போது மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த ராகேஷ் பூஜாரி திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு பதறிய நண்பர்கள் அவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விரைவில் இரண்டாவது திருமணம்? ஆதாரத்துடன் சர்ச்சையில் சிக்கும் ரவி மோகன்..! 

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி :

33 வயதான ராகேஷ் பூஜாரியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து அவரது நெருங்கிய நண்பரான கோவிந்தே கவுடா கூறியதாவது, எனது நண்பர் ராகேஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் முன்னதாகவே மிகவும் டயர்ட் ஆக இருக்கிறது என்று கூறினார் என கவலையுடன் தெரிவித்துள்ளார்.