Karisma Kapoor (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 23, மும்பை (Cinema News): இந்தி திரையுலகில் கபூர் (Kapoor Family) குடும்பத்தை சேர்ந்த நடிகை கரிஸ்மா கபூர் (Karisma Kapoor). இவர் ஹிந்தி திரையுலகில் கோலோச்சி இருந்த நடிகர் ரன்திர் கபூர் - பபிதா கபூர் தம்பதியின் மகள் ஆவார். கடந்த 2003ல் சஞ்சய் என்பவரை திருமணம் செய்தவர், 2016ல் அவரை பிரிந்தார். இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கரிஸ்மா கபூர், 1991ல் வெளியான பிரேம் கோய்டி படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்துவிட்டார். இவர் ஜீ சினி விருதுகள், ஸ்கிரீன் விருதுகள், இந்திய திரைப்படத்துறை விருது, தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர், பாலிவுட் திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். To Reduce Body Heat: திடீரென வாட்டிவதைக்கும் வெப்பம்; உடல்சூட்டை தணிக்க இயற்கையான வழிமுறைகள் இதோ.! 

Karisma Kapoor (Photo Credit: Instagram)

கடந்த 1997ல் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான தில் தோ பகல் ஹே (Dil To Pagal Hai) படத்திற்காக 3க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றார். இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் நடிகை தனது உதடுகள் கேமிராவில் பில்டர் போடாமலேயே சிவப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 49 வதிலும் இளமையாக இருக்கிறீர்களே, உங்களுக்கு பில்டர் தேவையா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டாடி வருகின்றனர்.