Thirsty (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 23, சென்னை (Health Tips): பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், மாறிப்போன காலநிலை, உணவுப்பழக்கவழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் உட்பட பல காரணங்களால் நாம் தொடர் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.

கொளுத்தும் வெயிலில் எப்போதும் முதல் பிரச்சனையாக உருவாகுவது நீரழிப்பபு பிரச்சனை தான். இந்தியா மிதவெப்பமண்டல காடுகளை கொண்டுள்ளதால், மழைக்காலங்களில் கூட மழை இல்லாத சமயங்களில் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் தன்மை கொண்டது.

சமீபகாலமாகவே திடீரென பெய்யும் மழை, பின் கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். உலகளவில் ஜூலை மாதம் கடுமையான வெப்பம் பதிவானதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Transparent Gulab Jamun: ஐஸ்கட்டியா? குலாப் ஜாமுனா?.. இனிப்பு பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஸ்வீட்டி வீடியோ.!

நமது உடலில் நீர் கணிசமாக வியர்வை மூலமாக வெளியேறும். அதிக வெப்பநிலை, அசௌகரியம், சோர்வு போன்றவை நீர் வெளியேற்றத்தால் ஏற்படும். இவ்வாறான காரணங்களில் நமது உடல் நீரிழப்புக்கு எதிராக இயற்கையாக செயல்படும். அதனை முறையாக பராமரிப்பது முக்கியம். திரவ வகையிலான உணவுகள் எடுப்பது நல்லது.

கடுமையான நீரிழப்பு பிரச்சனை உறுப்பு செயலிழப்பு, சோர்வு, தலைவலி, தலைகளில் பலவீனம் போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும். இதனால் சரியான முறையில் உடலினை கட்டாயம் பராமரிக்க வேண்டும். இல்லையேல் நீரிழப்பு சார்ந்த பிரச்சனை, அதனை கவனிக்காமல் விட்டு ஏற்படும் அடுத்த பிரச்சனை என தொடர்ந்து உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

Drinking Water with Lemon (Photo Credit: Pixabay)

நீரிழப்பு பிரச்சனையை தடுக்க சூடான நாட்களில் நீர் குடிக்க வேண்டும். இது உடலின் சூட்டை குறைக்க உதவும். இயற்கையாக உடலை குளிர்ச்த்தியடைய செய்யும். குளிர்பதன பெட்டிகளில் உள்ள பானங்களை தவிர்க்கவும். இயற்கையான பழச்சாறுகளை (இளநீர், எலுமிச்சை சாறு) குடிக்கலாம். PM Modi Respect National Flag: இதுதான் தேசப்பற்று..! காலடியில் கிடந்த தேசியக்கொடியை கையில் எடுத்து வைத்துக்கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ..!

உணவு சாப்பிடும்போது, சிற்றுண்டி எடுத்துக்கொள்ளும் போதும் தேவையான அளவு நீரினை உணவை எடுத்துக்கொண்டதும் குடிக்க வேண்டும். குறைந்தது நாளொன்றுக்கு 3 லிட்டர் நீராவது குடித்தால் தான், நமது உடல் நலமுடன் இருக்கும். நமக்கு தாகம் எடுக்கும் உணர்வு ஏற்பட்டதும் நீரை குடிப்பது நல்லது. சிலர் தாகம் நன்கு எடுத்தபின் பொறுமையாக நீர் குடிப்பார்கள். அவற்றை தவிர்க்க வேண்டும்.

நமது சிறுநீர் மஞ்சள், அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், உடலில் நீர்தேவை அதிகம் உள்ளது என்பது பொருள். ஆக சிறுநீர் கழிக்கும்போதே, உடலின் நீர்த்தேவையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும். ஆல்கஹால், காபின் நிறைந்த பானங்கள் போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தை கோடையில் தவிர்க்க வேண்டும். இவை உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றும். Mexico Road Accident: பேருந்து – கனகர லாரி மோதி பயங்கர விபத்து; 16 பேர் பலி., 36 பேர் படுகாயம்.! அப்பளமாக நொறுங்கிய பாதி பேருந்து.! 

அதனாலேயே குளிர்ச்சியாக என இரவில் பீர் குடித்து மகிழ்ப்பவர்களுக்கு கூட காலையில் நாவறட்சி, தண்ணீர் தாகம் போன்ற பிரச்சனை கடுமையாக ஏற்படும். நீர்சத்து நிறைந்த வெள்ளரி, முள்ளங்கி போன்றவற்றை வாங்கி சாப்பிட வேண்டும். வெளியே பயணிக்கும்போது நமது தேவைக்காக அல்லது பிறரின் அவசர உதவிக்காக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.

இயற்கையாக நமது உடலில் இருக்கும் சூட்டினை போக்கி, உடலை குளிர்ச்சியாக இருக்க பாதுகாக்க அரிசி, தினைவகை தானியங்களை வடித்து, புளிக்க வைத்து அதில் கிடைக்கும் நீரை குடித்தால் பல சத்துக்கள் கிடைக்கும். உடலின் சூடு தனிக்கப்படும். தயிருக்கு பதில் மோர், பழைய சோறு புளித்த நீர் போன்றவற்றை குடிப்பது சாலச்சிறந்தது. அன்றைய காலங்களில் வெளியே சென்று வருவோருக்கு, வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு மோர் கொடுத்ததன் காரணம் களைப்பு தீர்ந்து உடல் அமைதியாகட்டும் என்பதற்குத்தான்.