Kiara Advani - Sidharth Malhotra Liplock (Photo Credit: Instagram)

ஜனவரி 16, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சித்தார்த் மல்கோத்ரா (Sidharth Malhotra). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கரன் ஜோகர் இயக்கத்தில் வெளியான மை நேம் இஸ் கான் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு பின் பிரதர்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், மிஷன் மஜ்னு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடப்பு ஆண்டில் யோதா திரைப்படம் இவரின் நடிப்பில் வெளியாகவிருக்கிறது. அமேசான் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் நெடுந்தொடரிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். Parking Dispute 4 Death: பார்க்கிங் தகராறில் படுபயங்கரம்: 4 பேர் கொடூரமாக கொலை.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.! 

சித்தார்த் - கியாரா திருமணம்: ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அறியப்பட்ட கியாரா அத்வானியை (Kiara Advani) சித்தார்த் மல்கோத்ரா கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்தார். 16 ஜனவரி 2024 இன்று மல்கோத்ரா தனது 38வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். திருமணம் முடிந்த பின் அவருக்கு இது முதல் பிறந்தநாள் என்பதால், கணவன் - மனைவியாக இருவரும் மகிழ்ச்சியாக பிறந்த நாளை சிறப்பித்தனர்.

Celebrity Couple Kiara Advani - Sidharth Malhotra Birthday Celebration (Photo Credit: Instagram)

பிறந்தநாளுக்கு லிப்லாக் பரிசு: இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தம்பதிகள் இருவரும் தங்களின் அன்பை உதட்டோடு உதடு வைத்து முத்தம் பரிமாறி மகிழ்ந்தனர். நடிகை கியாரா அத்வானி எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, லஸ்ட் ஸ்டோரீஸ், லட்சுமி, போல் பாலையா 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ராம்சரனுடன் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்த வருகிறார்.