மே 24, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வந்த நடிகை லைலா கான், அவரின் குடும்பத்தினரான தாய் சலீனா, சகோதரர்-சகோதரிகள் அசிமினா, இம்ரான், ஜாரா, உறவினர் ரேஷிமா கான் ஆகியோர் கடந்த பிப்ரவரி 2011 மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டது. காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்த விவகாரத்தில் சலீனாவின் மூன்றாவது கணவர் பர்வேஸ் தக் மீது சந்தேகம் திரும்ப, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். TN School Opening Date: தமிழ்நாட்டில் ஜூன் 06ம் தேதி பள்ளிகள் திறப்பு; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
மரண தண்டனை விதித்து உத்தரவு: இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணைக்குப்பின்னர், இகத்புரி பண்ணை வீட்டில் இவர்கள் ஆறுபேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள், ஜூலை 12ல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டனர். குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னர், அவரின் மீது 984 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வந்த நிலையில், மே மாதம் 09ம் தேதி நீதிபதி சச்சின் பல்வந்த் பவார் பர்வேஸை குற்றவாளி என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று நீதிகள் அமர்வு குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பர்வேஸ் தக் முதலில் சாட்சியங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.