TN Minister Anbil Mahesh (Photo Credit: @Anbil_Mahesh X)

மே 24, சென்னை (Chennai): 2023 - 24ம் கல்வியாண்டு நிறைவுபெற்று, பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்தும் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, 2024 - 25ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பெறவுள்ள மாணவர்கள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்திய நிலையில், பள்ளிகள் திறப்பு (Tamilnadu Primary Secondary School Opening Date) தேதி குறித்த அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

ஜூன் 06 பள்ளிகள் திறப்பு: இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மாநில கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 06ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கல்வித்துறை இயக்குனரின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " 2024-25 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. Papua New Guinea Landslide: பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர சோகம்; மண்ணோடு மண்ணான கிராமம்.. நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி.! 

பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தல்: பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் அனைத்தும் மே 31ஆம் தேதிக்குள் பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மீண்டும் அவரும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.