Actress Rashmika Mandanna (Photo Credit: Instagram)

டிசம்பர் 20, புதுடெல்லி (New Delhi): தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் பெருவாரியான வரவேற்பை பெற்றது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ராஷ்மிகா கவர்ச்சி வீடியோ?: இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் உருவத்தையொத்த கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. இதனைக்கண்ட பலரும் முதலில் நடிகை ராஷ்மிகா லிப்டில் பயணிக்கும்போது கவர்ச்சியாக தோன்றியதாக நினைத்தாலும், அடுத்த நொடியே டீப் பேக் (Deepfake) என்ற தொழில்நுட்பத்தின் வாயிலாக முகம் மாற்றப்பட்டது உறுதியானது.

அதிர்ச்சியை தந்த டீப் பேக் தொழில்நுட்பம்: இந்த தகவல் இந்திய அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கி, வீடியோ வைரலாகியது. வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகாவும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு யாரையும் பாதிக்காத வரையில் பிரச்சனை இல்லை. ஆனால், இவ்வாறானவை எப்படிப்பட்டது என கூற பதில் இல்லை என்று கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். Delhi Shocker: 52 வயது நபரால் பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம் & கொலை; டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.! 

Rashmika Mandanna Deepfake Edit (Photo Credit: @PRASHU_PP X)

மத்திய அரசு அதிரடி உத்தரவு: இறுதியில் டீப் பேக் விவகாரம் பிரதமரின் பார்வை வரை சென்று, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்தாலும், அதனை தவறாக பயன்படுத்தும் கும்பல்களின் செயல்கள் அப்பாவிக்கு பாதிப்பை தருகிறது. இதனை சரிசெய்ய நாம் முயற்சிகள் எடுக்கிறோம் என்றும் தெரிவித்து இருந்தார். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சமூக வலைதள நிறுவனங்களுக்கு இதுசார்ந்த அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.

முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு: டீப் பேக் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர், விசாரணையை துரிதப்படுத்தினர். முதற்கட்டமாக வீடியோ பதிவிட்ட பெண்மணி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் டீப் பேக் வீடியோவின் விபரீதம் புரியாமல் அதனை பதிவிட்டது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியை கைது செய்ய அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.