Simran Son Graduated (Photo Credit: Instagram)

ஜூன் 07, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் 90களில் முன்னணி நடிகையாக இருந்த வந்தவர் சிம்ரன். தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தவர், தற்போது நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் இலங்கை தமிழராக நடித்து பலரையும் மீண்டும் கவர்ந்திருந்தார். மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.! 

பட்டம் பெற்றார் சிம்ரன் மகன்:

மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை சிம்ரனின் மகன் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது 49 வயதாகும் நடிகை சிம்ரன், கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மகன் தற்போது பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான நிகழ்வுக்கு நேரில் சென்று இருந்த இருவரும் அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிம்ரன் மகன் பட்டம் வாங்கிய புகைப்படம்: