ஏப்ரல் 19, சென்னை (Cinema News): ஏப்ரல் 19ம் தேதியான இன்று, ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய தேர்தல்கள் 2024-ன் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் (2024 General Elections) நடைபெற்று முடிகிறது. ஜூன் 03 வரை 7 கட்டமாக இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் முடிவுகள், ஜூன் 04 அன்று ஒரேகட்டமாக வெளியிடப்படும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாகவே திரைத்துறை பிரபலங்களில் தொடங்கி, தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை பலரும் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். India National Elections 2024 Google Doodle: 'ஒருவிரல் புரட்சியே' 2024 இந்தியா தேர்தல்கள்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்..!
ஜனநாயக கடமையாற்றிய திரிஷா: பல முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் வாக்குகளை பதிவு செய்வது, அவர்களின் ஆதரவாளர்களிடையே தாங்களும் ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், நடிகை திரிஷா (Actress Trisha) சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலை, புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளயில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை பதிவு செய்தார். அச்சமயம் அங்கிருந்தவர்கள் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட, அங்கிருந்த சிலருடன் புகைப்படம் எடுத்த நடிகை பின் புறப்பட்டு சென்றார்.
செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்:
A staff at the polling booth wanted to take a photo with #Trisha. @trishtrashers immediately fulfilled her request. 👍#LokSabhaElections2024pic.twitter.com/WfNvNjVKJP
— George 🍿🎥 (@georgeviews) April 19, 2024
வாக்களிக்க வந்த நடிகை திரிஷா:
Class- ஆக வந்து வாக்களித்த Trisha#trisha #voting #2024Elections #Elections2024 #LokSabhaElections2024 #loksabhaelections2024 #Pollingday #votingday #electionday2024 pic.twitter.com/GwapXYYWmh
— Kumudam (@kumudamdigi) April 19, 2024