Dates (Photo Credit: Pixabay)

ஜனவரி 14, சென்னை (Chennai): நமது உடலை ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது தலையாய கடமை ஆகும். அன்றாடம் ஓய்வின்றி உழைத்து வரும் நமக்கு, உடலில் தேவையான சத்துக்கள் இல்லாத பட்சத்தில் நோய் பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். அந்த வகையில், நாம் அவ்வப்போது உடல் நலத்தை தேற்றும் வகையில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று பேரிச்சம் பழத்தில் (Pericham Palam) இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பேரிச்சம்பழத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

எலும்புகளை பாதுகாக்க: பொதுவாக குளிர் காலத்தில் சூரிய ஒளி என்பது குறைவாகவே நம் இது படும். இதனால் உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைந்திருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்க்க வைட்டமின் டி பெரிதளவு உதவுகிறது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது அதனை அதிகரிக்க உதவும். இப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், காப்பர் போன்றவையும் எலும்புகளை பாதுகாக்கும். பேரிச்சம் பழத்தில் இருக்கும் கால்சியம் பற்களை வலுவாக்க உதவி செய்யும். குளிர்காலத்தில் பலருக்கும் ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையை சரி செய்ய, பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உதவும். மேலும், தசை வீக்கத்தினை குறைக்க உதவி செய்கிறது. Ancient Village in Amazon Rainforest: 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம் அமேசானில் கண்டுபிடிப்பு.. விபரம் இதோ.! 

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்: சுற்றுப்புறச் சூழ்நிலையில் வெப்பநிலை குறையும் போது, நமது உடலின் வெப்பமும் கணிசமாக குறையும். இதனால் அதிக குளிர் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பை வலுவாக்கும். அந்த வகையில், குளிர்காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். மேலும், உடலில் இருக்கும் கேடான கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்: பேரிச்சம்பழம் உடலுக்கு உடனடியாக சத்துக்களை வழங்கும் என்பதால், அதனை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சிக்கு முன் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரிச்சம்பழம் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கர்ப்ப காலத்தில் உடல்நலம் பெற, ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இதனை எடுத்துக் கொள்ளலாம்.

செயற்கை இனிப்புக்கு பதில் பேரிச்சம்பழம் சேர்க்கலாம்: நார்ச்சத்து கொண்ட பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால் உடலில் செரிமானம் சீராக்கப்படும். குடல் புற்றுநோய் பாதிப்பும் குறையும். பேரிச்சம்பழத்தில் இயற்கையாக காணப்படும் ஆண்டி ஆக்சிடென்ட், சருமத்தை இளமையாக வைக்க உதவி செய்யும். அதேபோல, பண்டிகை காலங்களில் செயற்கை சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சம்பழம் சேர்த்து இனிப்பு பலகாரங்களை சமைத்து சாப்பிடலாம்.