Andre Braugher (Photo Credit: @nbc X)

டிசம்பர் 13, நியூயார்க் (New York): அமெரிக்காவைச் சார்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் (Andre Braugher). இவர் பெரும்பாலும் ரகசிய உளவாளி தொடர்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆவார். இவரின் நடிப்பில் வெளியான ஹோமிசைடு லைப் ஆஃப் ஸ்ட்ரீட் (Homicide: Life on the Street), மென் ஆப் செர்டைன் ஏஜ், கேப்டன் ரைமண்ட் ஹால்ட் ஆகிய தொலைக்காட்சி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

உழைப்பால் உயர்ந்தவர், பண்புள்ளவர்: அஞ்சலக ஊழியராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஆண்ட்ரே, பின்னாளில் திரைத்துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சிகாகோவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) பயின்று திரைத்துறைக்கு அறிமுகமானார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய ப்ரூகரின் திரை வாழ்க்கை தற்போது வரை தொடர்ந்தது. பண்புள்ள மனிதராகவும் இருந்தார். இந்நிலையில், 61 வயதாகும் நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் உடல் நலக்குறைவால் காலமானார். Trending Video: ஆட்டோவில் தொங்கியபடி பயணித்த இளைஞரின் அதிர்ச்சி செயல்: அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பிய அப்பாவி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.! 

சோகத்தில் ரசிகர்கள், குடும்பத்தினர்: இவரின் மறைவு ஹாலிவுட் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது திரைப்பட வாழ்வில் 11 எம்மி விருதுகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார். சிறந்த குண சித்திர நடிகராகவும் இவர் விளங்கியிருக்கிறார். இவரின் மறைவு அவரது குடும்பத்தினர், திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.