Actor Radha Ravi (Photo Credit: YouTube)

பிப்ரவரி 15, சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியின் (Director Mohan G) அடுத்த திரைப்படமான பகாசூரன் (Bakasuran Movie) பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் (Selvaraghavan) கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ராதா ரவி (Radha Ravi), நடராஜ் (Natraj), கூல் சுரேஷ் (Cool Suresh), கே. ராஜன் (Producer K. Rajan) உட்பட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் (Bakasuran Trailer) மற்றும் ஸ்னீக் பீக் (Bakasuran Sneak Peek) காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பகாசூரன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் வைத்து நடைபெற்றது. அப்போது, நடிகர் ராதா ரவி தனது மனம் திறந்து பல விஷயங்கள் குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், "நான் பகாசூரன் படத்தில் முதலில் நடிப்பதாக இல்லை. மோகன் என்னை நடிக்க வைக்க விரும்பவில்லை. நான் அவரிடம் கேட்டபோது, உங்களுக்கு ருத்ர தாண்டவத்தில் (Rudra Thandavam) நல்ல வேடம் நடிக்க கொடுத்தேன். உங்களுக்கு இந்த வேடம் எப்படி இருக்கும் என கூறினார். அதற்கு நான் அவரிடம் தெரிவித்தேன், "நான் முதலில் வில்லன் வேடத்தில் தான் வந்தேன்., பின்னர் தான் நல்ல வேடம் கிடைத்தது" என்றேன். Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!

பின்னர் மோகனை சமாதானம் செய்து அந்த வேடத்தில் நடித்தேன். ஆனால், நான் அப்படியான வேடத்தில் நடித்ததற்கு இன்று வரை மோகனுக்கு பிடிக்கவில்லை. நான் நீண்ட நாட்களுக்கு பின்னர் படுகேவலமான வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். என்னை படத்தில் முதலில் பார்க்கும் போது பாராட்டுவார்கள். படம் முடியும் போது அப்படியே நிலை மாறும். என்னை திட்டுவார்கள். என்னை தொடக்கத்தில் திட்டியதால் தான் சம்பளம் ஏறியது.

Selvaraghavan - Mansoor Ali Khan - Radha Ravi | Bakasuran Visuals (Photo Credit: YouTube)

நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் நான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். அது சிறப்பாக வந்துள்ளது. அந்த வேடத்திற்கு நான் முழு ஈடுபாடோடு சிறப்பாக நடித்து கொடுத்துள்ளேன். ரிச்சர்ட் போல உள்ளவர்கள் அமைதியாக இருப்பது கவனிக்கத்தக்கது. அவர் கூட்டத்தை கண்டால் கூச்ச சுபாவம் கொண்டவர். மோகன் தைரியமாக ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் அம்பேத்கரை ஜாதிய தலைவர் இல்லை பொதுத்தலைவர் என கூறினார்.

அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோர் ஜாதிய தலைவர்கள் கிடையாது. அவர்கள் போன்று பலரும் பொதுத்தலைவர்கள். இந்த படத்தில் நடித்ததற்கு இயக்குனர் செல்வராகவன் கட்டாயம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டாயம் அவருக்கு அந்த விருது கிடைக்கும். தனுஷின் அண்ணன், பெரிய இயக்குனர் என்ற எந்த எண்ணம் இல்லாமல் சாதாரண நடிகராக பகாசூரனில் வாழ்ந்துள்ளார். West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!

திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள ஷாம் சிறப்பாக இசையை வழங்கியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் என்னப்பன் அல்லாவா என்ற சிவன் பாடல் வெளியாகி அருமையாக இருக்கிறது. நீங்கள் படத்தை பார்த்த பின்னர் என்னை திட்டாமல் இருக்கமாட்டீர்கள். நான் வில்லனாக நடித்ததில் பிடித்த படங்களுள் ஒன்றாக பகாசூரன் இருக்கிறது. இளைஞர்கள் தாய்-தந்தையுடன் படம் பார்க்க வேண்டும். படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும்.

திரையரங்குக்கு வந்து படம் பார்த்தால் பாப்கார்ன், ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட யார் செலவு செய்வது என பலரும் கேட்கிறார்கள். நீங்கள் வந்து சினிமா மட்டும் பார்த்துவிட்டு செல்லுங்கள். இங்கு வந்து எதற்காக பாப்கார்ன், ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள்?. நீங்கள் வாங்கி சாப்பிடுவதால் கூடுதல் விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு அதோடு படத்தை முடித்துவிட்டு சென்றுவிடுங்கள். அதில் உள்ள நாயகர்களை வீடு வரை அழைத்து செல்லாமல், உங்களின் வேலைகளை கவனியுங்கள்" என்று பேசினார்.

Video Thanks: Thi Cinemas

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 15, 2023 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).