Kelambakkam West Bengal Youngster Murder Case Accuse

பிப்ரவரி 15, கேளம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் (Kelambakkam, Chengalpattu), தாளம்பூரில் (Thalambur) காசா கிராண்ட் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு (Apartment Construction) கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள பல வடமாநில இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு தொழிலாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த கட்டுமான பணியில் மேற்கு வங்கம் மாநிலத்தை (West Bengal) சேர்ந்த கசேந்திரா மோகன் என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரனை பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அவரது முகாம் உள்ள இடத்திற்கு செல்ல வழி தெரியாமல், தாளம்பூர் நேரு நகர் வழியே பயணம் செய்துள்ளார். இவர் ஒருவர் மட்டும் வந்ததால் அவரை திருடன் என நினைத்து மக்கள் விசாரிக்க, அவருக்கு தமிழ் மொழியும் தெரியாத காரணத்தால் வங்க மொழியில் பதில் தெரிவித்து இருக்கிறார். AIADMK Worker Died: ஈரோடு இடைத்தேர்தல் களப்பணிக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

இதனால் அவரை திருடன் என சுயமாக உறுதி செய்த 6 இளைஞர்கள், மோகனை பயங்கர ஆயுதத்தால் கடுமையாக தாக்கி சாலையோரம் இருந்த கம்பத்தில் இரத்த வெள்ளத்தில் கட்டிவைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாளம்பூர் (Thalambur Police Station) காவல் துறையினர், மோகனை மீட்டு குரோம்பேட்டை (Chrompet Government Hospital) அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு (Chengalpattu Government Hospital) அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நேரு நகரை சேர்ந்த ஆனந்த, ராஜா, உதயகுமார், விக்னேஷ், பாலமுருகன், ரமேஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 15, 2023 09:33 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).