ஜனவரி 21: இயக்குனர் நந்தா லக்ஷ்மன் இயக்கத்தில், பிரதீப் செல்வராஜ், எ.ஆர் ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெடுமி (Nedumi). பனைமரம் ஏறுவோரின் (Palm Tree Workers Life) வாழ்க்கை பின்னணி குறித்த கதையம்சமாக படம் தயாராகியுள்ளது. இது ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பும் நேற்று நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திரை விமர்சகர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் (Bayilvan Ranganathan), "பாண்டிச்சேரியில் ஒரே நபர் நடிக்கவும், கலை இயக்குனராகவும் என பன்முகத்துடன் செயல்பட்டு படத்தை எடுக்கலாம். ஆனால், இது தமிழகத்தில் நடக்காது. பாண்டிச்சேரியில் (Pondicherry) திரைத்துறையினர் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு முதல் அனைத்தும் எளிதானது. Kantara Star Rishabh Blessed: காந்தாரா நாயகனை ஆசிர்வதித்த அசல் தெய்வம்.. படத்தயாரிப்பு குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ..!
பெரிய நடிகர்களே பாண்டிச்சேரி சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு ஒரே காரணம் அங்கு படப்பிடிப்பு கட்டணம் இல்லை. தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் பட்ஜெட் படம் எடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். படத்தை ஆழமாக எடுக்க வேண்டும். லவ்டுடே படம் பத்திரிகையாளர்களின் விமர்சனத்தால் மட்டுமே ஓடியது.
Watch Trailer Here
படம் நன்றாக இருந்தால் சிறந்த படம் என்று புகழுவோம், அது குறித்து எழுதுவோம். அதனால் பத்திரிகையாளரிடம் நீங்கள் படம் குறித்து நன்றாக எழுதுங்கள் என்று கூறவே வேண்டாம். தவறுகளை குறிப்பிட்டால் ஆத்திரம் வேண்டாம். இயக்குனர் பேரரசு (Director Perarasu) பேசும்போது பெரிய படத்தால் பட்ஜெட் படம் பாதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
அவர் 2 படங்கள் விஜயை (Actor Vijay) வைத்து எடுத்துள்ளார். அவரின் பேச்சு நாளை விஜயுடன் கைகோர்க்கும் நிலை வரும்போது, அதனையே பாதிக்கலாம். ஏனெனில் அவர் பெரிய இயக்குனர். நாளை அவர் விஜயிடம் கதை உள்ளது என பேச சென்றால், இந்த விஷயத்தை இரண்டு பேர் கூறுவார்கள். அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். Women Died Contraceptive Copper T: காப்பர் டி கருத்தடை சாதனத்தை நீக்க அறுவை சிகிச்சை; பெண் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!
நாங்களும் திமிங்கலம் ஆகுவோம் என்று ஒருவர் கூறுகிறார். திமிங்கலம் பிற மீன்களை சாப்பிட்டுவிடும். அவையெல்லாம் வேண்டாம். ஒரே வார்த்தையில் கூறவேண்டும் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன், உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர்ஸ்டார் அது ஒருவரே, அவர் ரஜினியே (One & Only Superstar Rajinikanth).
ஒரு பட்டத்தையா திருடுவீர்கள்?. கதையைத்தான் திருடுனீர்கள். பட்டத்தையும் திருடினால் எப்படி?. நான் சம்பந்தப்பட்டவரிடம் பேசியிருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - தளபதி விஜய் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் மௌனத்தை கலைக்க வேண்டும். இந்த விஷயத்தை ஒருவர் ஆதரிக்கவும் செய்கிறார். எதற்காக? ஏன்?. அவரே நான் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார்" என பேசினார்.