Bigg Boss Tamil Season 9 Week 1 Promo (Photo Credit : Instagram)

அக்டோபர் 11, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்ச்சைக்கு பெயர்போன சிலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், இந்த வாரம் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட இருக்கிறார்.

எலிமினேஷனுக்கு முன்பே வெளியேறிய போட்டியாளர்:

பிக் பாஸ் வீட்டின் விதிகளின்படி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்ற நினைக்கும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும். இந்த வாரம் நாமினேஷனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், அப்சரா, அகோரி கலையரசன் மற்றும் இயக்குனர் பிரவீன் காந்தி ஆகியோர் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகளில் கடைசி இடத்தில் அகோரி கலையரசன் மற்றும் பிரவீன் காந்தி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் இந்த எலக்ஷனில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியேறி இருக்கிறார். அதன்படி பிக் பாஸ் போட்டியாளரான நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி (Nandhini Evicted) இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. Bigg Boss Tamil Eviction: பிக் பாஸ் முதல் வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன வாட்டர் மெலன் ஸ்டார்.. லீக்கான தகவல்.!

இந்த வாரம் வெளியேறியது இவர்தான்:

தனிப்பட்ட காரணங்களால் அவர் வெளியேறி இருந்தாலும் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் அவரது பெயர் இல்லாததால் எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் அகோரி கலையரசன் மற்றும் பிரவீன் காந்தியில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இதனிடையே பிக் பாஸ் போட்டியில் விஜய் சேதுபதி ஆதிரை (Aadhirai Bigg Boss Tamil) மற்றும் கம்ருதீனை கடிந்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இது குறித்த புரோமோவில், விஜய் சேதுபதி நான் அனைவரையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களது பெயர்களை கூறுங்கள் என கூறவே, ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று சபரிநாதன், விக்ரம், எப்ஜெ என தங்களது பெயர்களை கூறினர். ஆனால் ஆதிரை மட்டும் அமர்ந்து கொண்டே கையை தூக்கி ஆதிரை சார் என தெரிவித்தார்.

பிக் பாஸ் முதல் ப்ரோமோ:

ஆதிரையால் மட்டும் ஏன் எழுந்திருக்க முடியவில்லை? உங்களுக்கு முன் நான்கு பேர் பெயரை கூறினார்கள். அனைவரும் எழுந்து தானே கூறினார்கள் என தெரிவிக்க, ஓகே என கூலாக ஆதிரை பதில் சொன்னார். இதனால் சற்று கோபமடைந்த மக்கள் செல்வன் ஓகே என்றால் என்ன அர்த்தம்? என கேட்க, நான் நார்மலாக தான் சொன்னேன். அவர்கள் எழுந்து சொல்வது அவர்களது விருப்பம் என ஆதிரை கூறினார். இதனை கேட்ட சக போட்டியாளர்கள் ஷாக்கான நிலையில், நீங்கள் உங்களது விருப்பத்திற்காக இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என விஜய் சேதுபதி கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து அடுத்த புரோமில் கம்ருதீன் (Kamrudhin Bigg Boss Tamil) சபரியை தவறாக சித்தரிக்க முயன்றார்.

ஆதிரையிடம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியது குறித்த வீடியோ:

பாலிடிக்ஸ் செய்யாதீங்க - கம்ருதீனை கடிந்துகொண்ட விஜய்சேதுபதி:

சபரி லக்ஸரி வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கவே நினைக்கிறார் என கம்ருதீன் தெரிவிக்கவே, விஜய் சேதுபதி அவரிடம் நீங்கள் உங்கள் ஹவுஸ் போட்டியாளர்களை வசம் இழக்க நினைக்கிறீர்கள். பாலிடிக்ஸ் செய்வதாக தோன்றுகிறது. உட்காருங்கள் கம்ருதீன். அடுத்த முறையாவது கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் என கடிந்துகொண்டார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டேட்டர்ஜி உபயோகித்து பலரும் விளையாடி வந்தாலும் சபை நாகரிகம் தெரிந்து தொகுப்பாளரிடம் மரியாதையாக பேசி வந்தனர். ஆனால் இந்த சீசனில் இருப்பவர்கள் தலைகனத்துடன், மரியாதைக்குறைவுடன் நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் இணையத்தில் இது குறித்த வீடியோவை பகிர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கம்ருதீனுக்கு அட்வைஸ் செய்த விஜய் சேதுபதி: