Oppenheimer (Photo Credit: Instagram)

மார்ச் 13, சென்னை (Cinema News): கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், நடிகர்கள் சிலியன் மர்பி, எமிலி பிளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், ஜோஷ் ஹார்ட்நெட், கேசி அஃப்லெக், ராமி மாலேக், கென்னத் பிரானாக் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஜூலை 21, 2023 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் ஓபன்ஹெய்மர் (Oppenheimer). கடந்த இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட ராபர்ட் ஓபன்ஹெய்மர் என்ற இயற்பியல் வல்லுனரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைப்படம்: 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவான திரைப்படம், வெளியீடுக்கு முன்னதாகவே ஜூலை 11 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் லே க்ராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நேரடியாக திரையிடப்பட்டது. லுட்விக் கோரன்சன் இசையில், ஜெனிபர் லேம் எடிட்டிங்கில், ஹோய்டே வான் ஹோய்டெமா ஒளிப்பதிவில் படம் உருவாகி இருந்தது. சின்காபி மற்றும் அல்டாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஓபன்ஹெய்மர் திரைப்படம், யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உலகெங்கும் வெளியிடப்பட்டது. 96th Oscars: கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், சல்லியன்… ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.! 

புதிய சாதனை படைத்த திரைப்படம்: உலகளவில் பல்லாயிரக்கணக்கான திரையரங்கில் வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம், 960.9 அமெரிக்க மில்லியன் டாலர் வசூல் செய்தது. கடந்த 2019ம் ஆண்டுக்கு வெளியான ஜோக்கர் திரைப்படத்திற்கு பின்னர், இத்திரைப்படம் ஹாலிவுட்டில் டாப் வசூலில் ஈடுபட்டுள்ளது. ஜப்பானில் மட்டும் இப்படம் வரும் மார்ச் 29ம் தேதிதான் வெளியாகிறது. ஏனெனில் இரண்டாம் உலகப்போருக்கு முன் ஜப்பான் அமெரிக்க கடற்படையை தாக்கி அழித்ததற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா வீசிய குண்டின் தாக்கம் இன்று வரை இருக்கிறது.

ஆஸ்கருக்கு பின் மீண்டும் திரையரங்கில் வெளியீடு: சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் (Oscars 96th Academy Awards 2024) விருது வழங்கும் விழாவில் ஓபன்ஹெய்ம்ர் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவித்தது. சிறந்த திரைப்படமாக ஓபன்ஹெய்மரும், சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலனும் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் ஓபன்ஹெய்மர் படத்திற்கு மீண்டும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த வார இறுதியில் 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மீண்டும் அப்படம் வெளியீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக படம் கூடுதலாக 100 மில்லியன் இலாபம் பெற்று, 1 பில்லியன் வசூலை கடந்து சாதனை செய்யவுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Oppenheimer (@oppenheimermovie)