மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட் திரையரங்கில் 96வது (Oscar Awards) ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ஹயாவ் மியசகி மற்றும் தோஷியா சுசுகி ஆகியோரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான 'தி பாய் அன்ட் தி ஹெரான்' பெற்றது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, 'The Holdovers' படத்தில் நடித்த டா வின் ஜாய் ரன்டோல்ப் பெற்றார். சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை ஜான் யோகாவின் இசையால் ஈர்க்கப்பட்ட 'வார் இஸ் ஓவர்' பெற்றது.
தழுவல் திரைக்கதை பிரிவு: சிறந்த அசல் திரைக்கதை (Original Screenplay) பிரிவில் கலந்துகொண்ட படங்களில், ஜஸ்டின் டிரேட் மற்றும் ஆர்தர் ஹாரி ஆகியோரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான 'அனாடமி ஆப் ஏ பால்' (Anatomy of a Fall) திரைப்படம் வென்றது. சிறந்த தழுவல் (Best Adapted Screenplay) திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை, கார்ட் ஜெபர்சனின் எழுத்து & இயக்கத்தில் உருவாகிய 'அமெரிக்கன் ஃபிக்ஷன்' திரைப்படம் பெற்றுள்ளது. 96th Oscars Live: ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
3 விருதுகள் அடுத்தடுத்து பெற்ற பூவர் திங்ஸ்: சிறந்த சிகை அலங்காரம் (Best Hair & Makeup), உடை வடிவமைப்பாளர் (Costume Design) மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Production Design Team) குழு விருதுகளை ஒருசேர அடுத்தடுத்து புவர் திங்ஸ் திரைப்படம் தட்டிச்சென்றது. இது அத்திரைப்படத்திற்கு அங்கீகாரமாக படக்குழுவால் கவனிக்கப்பட்டு பார்வையாளர்களிடமும் பாராட்டுகளை பெற்றது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த படைப்பான 'The Zone of Interest' கைப்பற்றியது.
துணை நடிகருக்கான விருது: சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான (Best Supporting Actor) பிரிவில், ஓப்பன்ஹைமர்' படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு விருது வழங்கப்பட்டது. இப்படத்தை தேர்வு செய்வதற்கு போட்டி நடுவர்களுக்கு மிகப்பெரிய சவாலே ஏற்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் உன்னதமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததாக நடுவர்கள் தீர்ப்புக்கு முன்பு பேசுகையில் தெரிவித்தனர். Poor Things on Oscars: ஆஸ்கரில் அடுத்தடுத்து 3 விருதுகளை வென்ற புவர் திங்ஸ்.. விபரம் இதோ.!
எடிட்டிங் & விசுவல் எபக்ட் விருது: 96 வது ஆஸ்கர் சிறந்த விசுவல் எபக்ட் (Best Visual Effect) பிரிவில், காட்ஸில்லா மைனஸ் ஒன் (Godzilla Minus One) திரைப்படம் தட்டிச்சென்றது. விருதை டகாசி யமஸாகி, கியோகோ சிபுபியா, மாஸ்கி தகசாகி, டாட்சுஜி நொஜிமா பெற்றனர். அதேபோல, சிறந்த எடிட்டிங் (Best Editing) பிரிவில் 'ஓப்பன் ஹைமர் (Open Heimer)' திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றது. அப்படத்தின் எடிட்டராக பணியாற்றிய ஜெனிபர் லேம் இவ்விருதை பெற்றார்.
ஆவண குறும்படத்திற்கான விருது: உண்மையை தழுவி எடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில், தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப் (The Last Repair Shop) வென்றது. குறும்படமாக வெளியாகிய தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப் குறும்படத்தை எழுதி இயக்கிய பென் ப்ரவுட்பூட், கிரிஸ் போபர்ஸ் பெற்றனர்.
உக்ரைன் போரை மையமாக வைத்து உருவான ஆவணப்படம்: 2024 ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படமாக '20 டேஸ் இன் மரியுபோல் (20 Days in Mariupol)' தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் மிஸ்டைஸ்லாவ் சேர்னோவ் (Mstyslav Chernov) விருதை பெற்றதும் பேசுகையில், உக்ரைன் - ரஷியா போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் ஒன்றான மரியுபோலில் (Mariupol) நடந்த இழப்புகள் ஏராளம். உக்ரைனை காப்பாற்ற வேண்டும், அங்கு ரஷியாவால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்து இருக்கின்றனர். உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தப்பட்டு, மனிதம் நிலைநாட்டப்பட வேண்டும். இதுவரை நடந்தவற்றை மாற்ற இயலாது, ஆனால் இனி அதனை தவிர்த்து வரலாறு படைக்கலாம். வரலாறுகள் மாற்றப்பட்டது எனினும், அவற்றை உருவாக்க முயற்சிக்கலாம் என கனத்த இதயத்துடன் பேசி சென்றார். அவையோர் பலரும் அவரின் கருத்தை ஏற்றுக்கொண்டு, எழுந்து நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். Best Actress by Oscars: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற எம்மா ஸ்டோன்..! உணர்ச்சிபோங்க பேசிய நடிகை.!
ஒலி அமைப்பு விருது: சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை 'ஓப்பன் ஹெய்மர்' தட்டிச்சென்றது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹொய்டி, கோய்டேமா ஆகியோர் பெற்றனர். சிறந்த நேரடி சண்டைக்காட்சிகள் குறும்படத்திற்கான பிரிவில், தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர் (The Wonderful Story of Henry Sugar) தட்டிச்சென்றது. இயக்குனர்கள் வாஸ் ஆண்டர்சன், ஸ்டீவ் ரோல்ஸ் ஆகியோர் விருதை பெற்றனர். சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருது பிரிவில், 'தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தில் ஒலி அமைப்பு பிரிவில் பணியாற்றிய டர்ன் வில்லியர்ஸ், ஜானி பர்ன் ஆகியோர் பெற்றனர்.
இசைக்கான விருது: சிறந்த அசல் பின்னணி இசை (Best Original Score) பிரிவில், ஓபன் ஹெய்மர் திரைப்படம் விருதை தட்டிச்சென்றது. லுட்விக் கோரன்ஷன் அதற்கான விருதை பெற்றார். சிறந்த பின்னணி பாடல் (Best Original Song) மற்றும் இசைக்கான ஆஸ்கர் விருதை, பார்பி (Barbie) படத்தில் இருக்கும் "வாட் வாஸ் ஐ மேட் ஃபார்" (What Was I Made For?) பாடல் தட்டிச்சென்றது. இதற்கான விருதை பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானல் பெற்றனர்.
நடிகர் & இயக்குனருக்கான விருது: சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை சில்லியன் மர்பி (Best Actor) தட்டிச்சென்றுள்ளார். ஓபன் ஹெய்மர் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஓபன் ஹெய்மர் திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி, 21 ஜூலை 2023 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. இரண்டாம் உலக போரில் நடந்த விஷத்தை மையக்கருவாக கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த (Best Director) இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஓபன் ஹெய்மர் படத்தை இயக்கி வழங்கி இருந்தார். Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.!
சிறந்த நடிகை & படத்திற்கான விருது: நடிகை எம்மா ஸ்டோன் பூவர் திங்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக (Best Actress) தேர்வு செய்யப்பட்டார். யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம், விடுதலைக்காக போராடும் பெண்ணின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்தது. விருதை பெற்ற நடிகை அவையோர் மற்றும் ரசிகர்களை பாராட்டி, உணர்ச்சி ததும்ப பேசினார். இறுதியாக கிறிஸ்டோபர் நோலனின் (Best Picture Awards) இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் (Oppenheimer) திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதை அவரின் மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் பெற்றார்.