Actor Soori Birthday 2024 (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 27, மதுரை (Cinema News): தமிழ் திரையுலகில் கஷ்டத்தில் வாழ்ந்து, பின்னாளில் திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தை பெற்ற நட்சத்திர நடிகர்களில் சமீபத்தில் சூரி (Soori) மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார். ராமலட்சுமணன் முத்துச்சாமி என்ற இயற்பெயரை கொண்ட சூரி, முன்னதாக பரோட்டா சூரி என அறியப்பட்டார். கடந்த 1998ம் ஆண்டு முதல் சூரி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், 2009ம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பெருவாரியான அடையாளத்தை சூரிக்கு பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்கு பின்னரே அவர் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார்.

சூரியின் திரைவாழ்க்கை:

தனது இளம் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்த சூரி, கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்தி குடும்பத்தின் பாரத்தை தாங்கிக்கொண்டு இருந்தார். மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த போதிலும், குடும்பத்தின் வறுமையை போக்க பல்வேறு பணிகளை செய்து உழைப்பாளியாக இருந்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து இருந்தார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பின்னர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரஜினிமுருகன், இது நம்ம ஆளு, வெள்ளைக்காரன், சங்கிலி புங்கிலி கதவை திற, சீமராஜா, சாமி ஸ்கொயர், நம்ம வீட்டுப்பிள்ளை, சங்கத்தமிழன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். Aishwarya Rai On Her marriage: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவா? சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..! 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகர் சூரி:

கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் நடித்த சூரி, சர்வதேச அளவில் அடையாளத்தை பெற்றார். தற்போது வெளியான கொட்டுக்காளி திரைப்படமும் பல மூத்த நடிகர்கள், இயக்குநர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. திரையுலகில் சூரியின் நடிப்பை பாராட்டி சைமா, தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாளப்படுத்தப்படாத கதாபாத்திரங்களில் நடித்து, காமெடியனாக அடையாளம் பெற்று, இன்று முக்கிய தமிழ் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர் சூரி, எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 27 ஆகஸ்ட் 1977ம் ஆண்டு பிறந்த நடிகர் சூரிக்கு, இன்று 47 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரின் ரசிகர்கள் மற்றும் சக திரையுலகினர் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்கின்றனர். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை கருத்துப்பதிவேட்டில் பதியலாம்.

மறுமலர்ச்சி, சங்கமம், வின்னர், காதல், ஜி, தீபாவளி, பீமா ஆகிய படங்களில் மிக குறுகிய மற்றும் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்த சூரி இன்று மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார். அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக, இன்று வெற்றிக்கனியை சுவைக்கிறார். தொடர்ந்து அவர் வெற்றியை குவிக்க லேட்டஸ்ட்லி தமிழும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

கொட்டுக்காளியை உலக நாயகன் வாழ்த்திய தருணம்: