Thalapathy Vijay (Photo Credit: @KVFC_Official X)

மார்ச் 19, திருவனந்தபுரம் (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார்.

விஜய்யை பார்க்க, பல ஆயிரம் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே விஜய் தனது காரில் ஏறி சென்றார். விஜயின் காரை நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரை செல்ல விடாமலும் தடுத்தனர். இந்நிலையில் இவர் பயணித்த டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிளாஸ் கார் ரசிகர்கள் மத்தியில் சிக்கியதால் ரசிகர்கள் அந்த காரை சூழ்ந்து கொண்டனர். இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. School Leave: தேர்தல் எதிரொலி... மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளிக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..!

நடிகர் விஜய் பயணித்த கார் ரசிகர் கூட்டத்திற்கு இடையே சிக்கி சேதம் அடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய் பெரும் சிரமத்திற்கு பிறகு ஹோட்டலை அடைந்தார். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், அடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.