Atlee Kumar - Priya Family (Photo Credit: Instagram)

பிப்ரவரி 01, பாரிஸ் (Cinema News): இயக்குனர் சங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் அட்லி குமார் (Atlee Kumar), இவரது இயற்பெயர் அருண்குமார்.

பிளாக்பஸ்டர் இயக்குனர்: ராஜா ராணியின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் கரம் கோர்த்த அவர் தெறி, மெர்சல், பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்களையும் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்தி திரையுலகில் ஜாம்பவானாக இருக்கும் ஷாருக்கானுடன், நீண்ட இடைவெளிக்கு பின் ஜவான் திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றி சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டார். Madurai Shocker: சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு; சகோதரி, அவரின் காதலர் கொடூர கொலை.. இளைஞரின் சாதி வெறியால் அதிர்ச்சி..! 

Director Atlee with Wife Priya (Photo Credit: Twitter)

6 படங்களில் 3க்கு விருதுகள்: தனக்கென ஒரு தனி பாணியை வைத்து, திரைப்படங்களின் காட்சிகள் வாயிலாக ரசிகர்களை கவர்ந்து, தனது திரைப்படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் காட்சிகளை வைத்து, அதனை வெற்றி படமாக்கி, பின்னாளில் அதனை தனது அடையாளமாகவும் மாற்றிக் கொண்டார். இவரது திரைப்பட பயணங்களை பாராட்டி தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருதுகள், விஜய் அவார்ட்ஸ், ஐஃபா உற்சவம், சைமா விருதுகள் ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்காக கிடைத்தன.

குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் கிருஷ்ண பிரியா என்ற பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். தம்பதிகளுக்கு கடந்த 2023ம் ஆண்டு மீர் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில், தம்பதிகள் தங்களது மகனுடன் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகனின் முதல் பிறந்தநாளில் இருவரும் டிஸ்னி லேண்ட் சென்று இருக்கின்றனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)