மே 16, சென்னை (Chennai): தமிழ் மொழிகளில் வெளியான கத்தி, செக்கச்சிவந்த வானம், தர்பார், எந்திரன் 2, பொன்னியின் செல்வன் 2 பாகங்கள்உட்பட பல ஆகிய படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் லைகா. விரைவில் திரையில் வெளியாகவுள்ள இந்தியன் 2, லால் ஸலாம், விடா முயற்சி ஆகிய படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், லைகா நிறுவனம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. இந்த தகவலின் பேரில் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு, காரம்பாக்கம் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!
இன்று காலை திடீரென நடத்தப்பட்ட சோதனையால், லைகா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜி.கே.எம் தமிழ் குமரன் பணியாற்றி வருகிறார். கடந்த 2014 முதல் லைகா குழுமம் படங்களை தயாரித்து வழங்கியும், விநியோகம் செய்தும் வருகிறது.
கத்தியில் தொடங்கி 2.0, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பேரில் சோதனை என தகவல்.. #Lyca | #LycaProductions | #LatestLY_Tamil @latestly pic.twitter.com/If33tdkZ26
— Sriramrpckanna (@Sriramrpckanna1) May 16, 2023