ஏப்ரல் 13, குருகிராம் (Cinema News): ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ரோஹித் அரோரா. இவரின் வீட்டில் சம்பவத்தன்று டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி (Swiggy Delivery Agent) நிறுவனத்தின் பணியாளர், அரோராவின் நண்பருடைய ஷூ ஒன்றை தன்னுடன் திருடி சென்றார். இந்த விஷயம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. ஷூ மாயமானதை அறிந்த அரோராவின் நண்பர் சிசிடிவி கேமிராவை சோதனை செய்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அரோரா விஷயம் குறித்து ஸ்விக்கி நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்தவர் தனது சமூக வலைதளபக்கத்தில் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!
சோனு சூட்டின் பதிவும், பார்வையாளர்களின் ஆதங்கமும்: இதனால் மேற்கூறிய விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்து செய்தியாக வெளியானது. பலரும் ஸ்விக்கி ஊழியருக்கு கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த நடிகர் சோனு சூட், ஸ்விக்கி ஊழியரை அனைவரும் மன்னியுங்கள். அவருக்கு ஷூ தான் தற்போது தேவை. அதனை வாங்கிக்கொடுக்கலாம் என கூறினார். சோனு சூட்டின் செயல் ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மற்றொருபுறம் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. நாளை ஸ்விக்கி ஊழியர் இருசக்கர வாகனத்தை திருடினால், அவரின் தேவை கருதி அதனை வாங்கித்தருவீர்களா?. ஷூவை அவர் கேட்டு அனுமதியுடன் கூட எடுத்து சென்று இருக்கலாம். இவ்வாறு செய்வது எப்படி? என தங்களின் கண்டனத்தையும் குவித்து வருகின்றனர்.
Swiggy's drop and PICK up service. A delivery boy just took my friend's shoes (@Nike) and they won't even share his contact. @Swiggy @SwiggyCares @SwiggyInstamart pic.twitter.com/NaGvrOiKcx
— Rohit Arora (@_arorarohit_) April 11, 2024
நடிகர் சோனு சூட்டின் பதிவு:
If Swiggy’s delivery boy stole a pair of shoes while delivering food at someone’s house. Don’t take any action against him. In fact buy him a new pair of shoes. He might be really in need. Be kind ❤️🙏
— sonu sood (@SonuSood) April 12, 2024