மார்ச் 06, பாண்டிச்சேரி (Puducherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 9 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். வீட்டில் வெளியே இருந்த சிறுமி கடைவீதிக்கு நடந்து சென்ற நிலையில், அவர் தனியாக முதலில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: மாயமான சிறுமியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சிறுமி அங்குள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு வீசப்பட்டது. சிறுமியின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கஞ்சா போதைக்கும்பலால் பயங்கரம்: பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், தொடர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 2 நபர்களை அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உள்ளூர் மக்களின் தகவல்படி, சிறார்கள் 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பலால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது. Meta Down Loss: 3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்த மெட்டா; தொழில்நுட்ப கோளாறால் இழப்பு.!
காவல்துறையினர் குவிப்பு: தொடர் பதற்றம் மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக பாண்டிச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள்ளது. இவ்விவகாரத்திற்கு சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் கடுமையாக குவிந்து வருகின்றன. பலரும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
எண்ணம் வந்ததும் வாழ தகுதியில்லை: இந்நிலையில், மசாலா பாப்கார்ன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு, நீதி பாரபட்சமின்றி விரைந்து என்று கிடைக்கும்? இங்கு எல்லாம் அரசியலென ஆகிவிட்ட சமூகத்தில் பேதைமையை விட சட்ட போதாமை தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது! குழந்தை மீது பாலியல் எண்ணம் வந்த நொடி அவன் வாழ தகுதியற்றவன் ஆகிவிட்டான். சுட்டு வீழ்த்த வேண்டாமோ?" என கூறியுள்ளார்.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு, நீதி பாரபட்சமின்றி விரைந்து என்று
கிடைக்கும்? இங்கு எல்லாம் அரசியலென ஆகிவிட்ட சமூகத்தில் பேதைமையை விட சட்ட போதாமை தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது! குழந்தை மீது பாலியல் எண்ணம் வந்த நொடி அவன் வாழ தகுதியற்றவன் ஆகிவிட்டான். சுட்டு வீழ்த்த வேண்டாமோ?
— Aishwarya (@Aishwarya12dec) March 6, 2024