Meta (Photo Credit: Pixabay)

மார்ச் 06, கலிபோர்னியா (Technology News): கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவில் பிரபலமாகி வந்த பேஸ்புக், மார்க் ஜுக்கம்பர்க் என்ற நபர் தனது நண்பர்களுடன் பேசுவதற்கு பயன்பட்டு பின்னாளில் உலகளாவிய அறிமுகத்தை சந்தித்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப், திரெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மெட்டா குழுமத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் பல நாடுகளில் பயனர்களை கொண்ட மெட்டா நிறுவனத்திற்கு, இந்திய சந்தை முக்கியமானது ஆகும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய செயலிகள் பயனர்கள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலும், குழுக்களுக்கும் பகிர பிரதானமாக பயன்படுகிறது. பேஸ்புக் தனிநபரின் கருத்துக்களை உலகுக்கு தெரிவிப்பது மட்டுமல்லாது, உலகளாவிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. IPL 2024 on Jio Cinema: அச்சச்சோ தோனிக்கு ரொம்ப வயசாகிருச்சே.. ரசிகர்களுக்கு ஒரே அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி தந்த தல தோனி.! 

Instagram | Facebook (Photo Credit: Pixabay)

3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு என தகவல்: சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் அங்கமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்ப ரீதியான கோளாறுகளை சந்திக்கும். அதனை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் விரைந்து சரி செய்வார்கள். மெட்டா நிறுவனத்தின் வருவாய் என்பது முழுக்க முழுக்க பயனர்கள் தங்களின் செயலியில் வீடியோ பதிவிடுவது, விளம்பரம் என இருப்பதால், மெட்டா சில நிமிடங்கள் முடங்கினாலும் அவர்களுக்கு இழப்பு ஏற்பட தொடங்கும். இந்நிலையில், நேற்று இந்திய நேரப்படி இரவு நேரத்தில் திடீரென மெட்டாவின் அங்கமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கிப்போயின. பயனர்கள் தங்களின் கணக்குகளை உபயோகம் செய்ய இயலாமல் திணறிப்போயினர். தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில், சிலமணிநேரம் முடங்கிப்போன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் காரணமாக மெட்டா நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க சந்தையில் 1.6% சரிவை எதிர்கொண்டு சந்தித்து, 3 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.