ஆகஸ்ட் 02, மும்பை (Cinema News): நிதின் சந்திரகாந்த் தேசாய் என்ற இயற்பெயரை கொண்ட நிதின் தேசாய் (Nitin Chandrakant Desai), இந்திய சினிமாவின் உயரிய கலை இயக்குனர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆவார். இவர் கடந்த 1987 முதல் திரைத்துறையில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
தொடக்கத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்த நிதின் தேசாய், அன்றைய காலகட்டத்தில் கலை இயக்குனராக கோலோச்சி இருந்த நிதிஷ் ராயிடம் இருந்து பல நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தார்.
4 படங்களில் நடித்துள்ள இவர், Hello Jai Hind உட்பட 2 படங்களை இயக்கியும் இருக்கிறார். 2 படங்களை தயாரித்தும் வழங்கியுள்ளார். பெரும்பாலும் ஹிந்தி மற்றும் மராத்திய படங்களிலேயே பணியாற்றினாலும், இந்திய அளவில் கவனிக்கப்படும் கலை இயக்குனர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். Tirunelveli Child: சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்; செல்போனை கையில் கொடுத்து திசைதிருப்பி வெற்றிகண்ட அதிகாரிகள்.!
1989ல் வெளியான பரிண்டா திரைப்படத்தின் மூலமாக கலை இயக்குனராக உருவெடுத்த நிதின் தேசாய், 4 தேசிய அளவிலான சிறந்த கலை இயக்குனர் விருதுகளை பெற்றுள்ளார். ஜோதா அக்பர் படத்தின் கலை இயக்குனரும் இவரே ஆவார். 3 பிலிம்பேர், இபா, மகாராஷ்டிரா மாநில அளவிலான சிறந்த கலை இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார்.
இவர் தனது பெயரிலேயே ND Studio நிறுவனத்தை மும்பை கர்சாட் பகுதியில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது படத்தயாரிப்பு நிறுவனத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் சடலமாக காவல் துறையினரால் மீட்கப்பட்டது.
ஆகஸ்ட் 9ம் தேதி அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவர் தனது சொந்த ஸ்டுடியோவில் வைத்தே தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் மறைவை அறிந்த திரையுலகினர் பலரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். காவல் துறையினர் இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.