ஆகஸ்ட் 17, அசாம் (Sports News): மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (Khelo India Youth Sports) நிகழ்வை அறிமுகம் செய்தது. இந்த விளையாட்டுப்போட்டிகள் வாயிலாக இந்தியாவெங்கும் இருக்கும் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறியப்பட்டு, அவர்களை தேசத்திற்காக விளையாட தேவையான பயிற்சிகளை வழங்குவது இனிதான் நோக்கம் ஆகும்.
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா (HImanta Biswa Sarma) பணியாற்றி வருகிறார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் தொடக்கத்தில் இருந்து தனது முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். Spain Forest Fire: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் பரவத்தொடங்கியது காட்டுத்தீ; மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்..!
மாநிலத்தில் இருக்கும் பல திறமைசாலிகளை அடையாளப்படுத்தும்பொருட்டு பல விளையாட்டு ஊக்குவிப்பு செயல்திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இரயில்வே மேம்பாலத்திற்கு கீழே பேட்மிட்டன் விளையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, இரயில்வே பாலத்திற்கு கீழே இருக்கும் காலி இடத்தில் பொதுவாக அழகுக்காக அல்லது மக்களின் பயன்பாட்டுக்காக அவ்விடத்தில் சிறிய அளவிலான பூங்கா அல்லது பூச்செடிகள் வளர்க்கப்படும்.
இந்த இடத்தை விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற திட்டமிட்ட முதல்வரின் ஆலோசனைப்படி, அங்கு பேட்மிட்டன் விளையாடி பயிற்சி எடுக்கும் வகையில் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை அசாம் முதல்வர் ஹிமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The innovative use of space beneath the Railway Over Bridge for a badminton court is a creative way to promote sports and recreational activities. We’re glad to be taking such initiatives that contribute to the #KheloIndia movement. pic.twitter.com/Cr3m4fdsQr
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 17, 2023