Match 4: LSG Vs DC | IPL 2025 (Photo Credit: @IPL X) (2)

மார்ச் 24, விசாகப்பட்டினம் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று (24 மார்ச் 2025) திங்கட்கிழமை, நான்காவது ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் (Lucknow Super Giants Vs Delhi Capitals Timeline) மோதும் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் போட்டி தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். LSG Vs DC Toss Update: ஐபிஎல் 2025 போட்டி; லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதல்.. டெல்லி பேட்டிங்.! 

லக்னோ அணி பேட்டிங் செய்கிறது:

இந்நிலையில், முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பௌலிங் தேர்வு செய்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. எல்எஸ்ஜி Vs டிசி போட்டியில், லக்னோ அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ஏய்டன் மார்க்கம் 13 பந்துகளில் 15 ரன்கள், மிட்சல் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள், நிகோலஸ் பூரான் 30 பந்துகளில் 75 ரன்கள், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அசத்தி இருந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதனால் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது. டெல்லி அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள், விப்ராஜ் மற்றும் முகேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

நிகோலஸ் பூரான் அதிரடி ஆட்டம்:

மார்ஷ் அதிரடி ஆட்டம்:

டாஸ் அப்டேட்: