அக்டோபர் 18, மும்பை (Sports News): இந்திய அணியின் கேப்டனாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இருப்பவர் ரோஹித் சர்மா (Rohit Sharma). இந்திய கிரிக்கெட் அணி இவரின் தலைமையில் பல நாடுகளுக்கு சென்று தொடர் வெற்றிகளை குவித்து வந்தது.
தற்போது இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை 2023 (ICC Cricket World Cup 2023) தொடரில், இந்தியா எதிர்கொண்ட 3 போட்டியிலும் அபார வெற்றி அடைந்தது. இந்நிலையில், ரோஹித் சர்மா அதிவேகத்தில் காரை இயக்கியதாக புகார் எழுந்து, அவருக்கு மும்பை காவல் துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. TN Weather Update: 3 மாவட்டங்களில் இன்று கனமழை; மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில், ரோஹித் சர்மா தனது காரில் 215 கி.மீ வேகம் வரை சட்டவிதிகளை மீறி பயணம் செய்துள்ளார். இவை அங்குள்ள கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3 இடங்களில் அவர் அதிவேகத்தில் பயணம் செய்து அபராதத்தை பெற்றுள்ளார்.
சாலையில் அதிவேகத்தில் செல்வது உயிருக்கு ஆபத்தான விஷயம் என தெரிந்தும், சிலர் தங்களின் விலைஉயர்ந்த சொகுசு காரில் பணிசூழல் காரணமாக அதிவேகத்தில் பறப்பது தொடர்கதையாகியுள்ளது. புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாட காரில் அதிவேகமாக சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கி, மரணத்தை தழுவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.