Salaar Movie Update (Photo Credit: Twiitter)

ஜூலை 03, பெங்களூர் (Cinema News): பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில், ரவி பசூர் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் நாயகனாக தெலுங்கில் உச்ச நடிகராக வலம்வரும் பிரபாஸ் நடித்துள்ளார்.

இதனைதவிர்த்து பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மது குருஸ்வாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி உட்பட பலரும் நடித்துள்ளனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. Trending Video: ஈவிரக்கமின்றி நாயை காருக்குள் பூட்டிவைத்து, தாஜ்மஹாலின் அழகை காணச்சென்ற குடும்பம்..! 

தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சலார் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் எப்போதும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், படத்தின் டீசர் ஜூன் 6ம் தேதி காலை 05:12 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.