ஜூலை 03, ஆக்ரா (Trending Video): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலை சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் நேரில் வந்து கண்டுகளித்து செல்கின்றனர். உலக அதிசியங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று வார விடுமுறையையொட்டி பல நகர்களை சேர்ந்தவர்களும் தாஜ்மஹாலுக்கு வந்திருந்தனர். அங்கு ஹரியானா மாநில பதிவெண் கொண்ட HR 80 E 3383 வாகனத்தில் குடும்பத்தார் வந்திருந்தனர்.
அவர்களுடன் வளர்ப்பு நாயும் வந்திருந்த நிலையில், நாயை காருக்குள் வைத்து அடைத்துவிட்டு தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றனர். நாய் சிலணிநேரம் கொளுத்தும் வெயிலோடு வாகனத்திற்குள்ளேயே சுருண்டு கிடந்தது. MP Shocker: மாற்றுத்திறன் இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண்மணி; கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
இந்த நிகழ்வை வீடியோ எடுத்துள்ள இளைஞர் ஒருவர், ஆக்ரா காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். இதன்பேரில் அதிகாரிகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாவுக்கு செல்வோர் தங்களின் செல்ல பிராணிகளை அழைத்து செல்ல விரும்பும் இருப்பின், அவற்றை பொறுப்புணர்வோடு கவனிக்க வேண்டும். மாறாக காரில் பூட்டிவைத்து செல்வது சில நேரம் அவையின் இறப்புக்கும் வழிவகை செய்யும்.
Tourist from Haryana came to Agra visit Taj Mahal Tourist had brought a pet dog with him, Parked car in Westgate parking Taj, locked dog in car and went to visit Taj,Dog locked in a car for several hours in humid heat broke its breath @Uppolice @agrapolice pic.twitter.com/uUjm37ZpKu
— Amir qadri (@AmirqadriAgra) July 2, 2023