ஜூன் 06, சென்னை (Cinema News): பிரபாஸ், பிரித்விராஜ், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்பட சலார். கே.ஜி.பி இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரவி பாசூரின் இசையில் சலார் திரைப்படமும் உருவாகியுள்ளதால், திரையரங்கில் இசை தெறிக்கவிடும் என்றும் ரசிகர்கள் ஆட்பறிக்கின்றனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் தயாராகி இருக்கிறது. MS Dhoni: கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் செல்லப்பிள்ளை, மின்னல் வேக நாயகன் தோனிக்கு இன்று பிறந்தநாள்; மாஸ் காண்பித்த ஹைதராபாத் ரசிகர்..!
படத்தின் டீசர் அட்டகாசமாக வெளியாகியுள்ள நிலையில், கே.ஜி.எப் படத்தை போல அதிரடி காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சலார் திரைப்படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.